டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு
கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 19 ஆயிரத்து 912 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது நிலவும் டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 36 பிரிவுகளை அதிக அபாய வலயங்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
October 13, 2022
Rating:

No comments:
Post a Comment