அண்மைய செய்திகள்

recent
-

திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

கொட்டகலை – திம்புல பத்தனை பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்நோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது, இவ்வாறு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். 

 இந்த விபத்தின் போது, அப்பகுதியில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் 48 வயதான பி. ஜகத் ஜெயானந்த பண்டார என இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார். விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்! Reviewed by Author on October 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.