அண்மைய செய்திகள்

recent
-

கோபா தலைமைப் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக கபீர் ஹாசிம் அறிவிப்பு இதற்கான நியமனம் இன்று வழங்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்ற அமர்வில் இதனைத் தெரிவித்தார்.

 கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது. அதன் உறுப்பினர்களில் மாற்றம் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கோபா மற்றும் கோப் குழுக்களுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோபா தலைமைப் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு! Reviewed by Author on October 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.