மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்.
மேலும் விதை நெல், உரமானியம், விவசாயிகளுக்கான காப்புறுதிகள், விவிசாயிகள் எதிர் கொள்ளும் கால்நடைகளின் தாக்கம் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், மறு உணவுப்பயிர்கள் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர், மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்
மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்.
Reviewed by Author
on
October 12, 2022
Rating:

No comments:
Post a Comment