அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்கி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த வியத்தை குறிப்பிட்டுள்ளார். 

 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பூர்த்தி செய்வதற்கான காலத்திற்கும், உள்நாட்டில் உயர்கல்வியை பூர்த்தி செய்வதற்கான காலத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளதாகவும் மாணவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அறிவிப்பு! | University Ranil அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார். பாடசாலை கல்வியை நிறைவு செய்து உயர்கல்விக்காக தகுதி பெறும் மாணவர்களின் கல்விக்கான சந்தர்ப்பங்கள் அரசினால் விரிவுபடுத்தப்படும் எனவும், குருநாகல், மட்டக்களப்பு உள்ளிட்ட மேலும் சில இடங்களில் பல்கலைகழங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அறிவிப்பு! Reviewed by Author on October 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.