மின்னல் தாக்கி ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்
உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் மற்றுமொரு நபருடன் நேற்று (13) மாலை வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்தி கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவரின் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கல்கமுவ வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் நவகத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னல் தாக்கி ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment