2023 வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு!
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது சிங்கள மக்கள் அதை எதிர்த்து தடுத்திருந்தால் இன்று சிங்கப்பூர் இலங்கையிடம் கடன் கேட்கின்ற நிலமைக்கு வளர்ந்திருக்கும்.ஆகவே அடிப்படை பிரச்சனை அங்கிருந்து தான் உருவாகியுள்ளது.
இப்படியான சூழலில் தற்போது இந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதி வரவு செலவு திட்டம் முன்மொழிந்தது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு பொருத்தமாக அமையவில்லை.
இந்த வரவு செலவு திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கு நிதிகள் முன்மொழியப்பட்டு இருந்தாலும் இலங்கையின் வருமானம் அதில் சரியாக குறிக்கப்படவில்லை.
குறிப்பாக அங்கவீனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5000ரூபா பணத்தைக் கூட 2500 ரூபாவாக குறைப்பதற்கு இந்த அரசு முயற்சித்து வருகிறது.
இதே போன்று பல அதிருப்தியான விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே வரவு செலவு திட்டத்தில் கட்சி முடிவெடுக்கவில்லை.
எனது தனிப்பட்ட கருத்தாக இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
2023 வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு!
Reviewed by Author
on
November 18, 2022
Rating:

No comments:
Post a Comment