தனுஷ்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளையின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை சிட்னி நகர பொலிஸார் பரமட்டா பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்படவில்லை.
தனுஷ்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
Reviewed by Author
on
November 07, 2022
Rating:

No comments:
Post a Comment