அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு கடலில் இருந்து கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று இன்று (27) கரையொதுங்கியுள்ளது. 

குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர் கடந்த 25 ஆம் திகதி கடற் தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. 

தீவிரமாக தேடுதல் மேற்கொண்டும் குறித்த மீனவர் மீட்கப்படாத நிலையில் இந்த சடலம் கரையொதுங்கியது. 

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் சடலத்தை அடையாளம் காட்டிய நிலையில், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிகை எடுக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






புங்குடுதீவு கடலில் இருந்து கரையொதுங்கிய சடலம் Reviewed by Vijithan on May 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.