சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமனம்.
இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படும் என சயித் பிரேமதாச அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
கலாநிதி ஜனகன் அவர்களின் இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக கல்வி துறை ரீதியான பங்களிப்பும் அனுபவமும் இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்க மிக உறுதுணையாக இருக்கும் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக பத்திரன , கலந்து கொண்டார்.
இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக online மூலமும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
. மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் கலாநிதி ஜனகன் அவர்களின் வழிநடத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களும் பயன் அடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என குறிப்பிட்டார்
சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமனம்.
Reviewed by Author
on
November 22, 2022
Rating:

No comments:
Post a Comment