அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற மலர் வெளியீடும்,மாவட்ட கலைஞர் கௌரவிப்பும்.

மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் 'மன்னெழில் -11' மலர் வெளியீடு, 2022ம் ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று புதன்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை ,பண்பாட்டுப் பேரவை யின் தலைவருமான திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் .இ.வரதீஸ்வரன் , சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜ மல்லிகை சிவசுந்தரம் சர்மா மற்றும் கௌரவ விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி லிங்கேஸ்வரி துணைவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 இவ் நிகழ்வானது மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் அமரர் பி.ஏ.அந்தோனி மார்க் அரங்கில் இடம் பெற்றது. இதன் போது மலர் வெளியீடு செய்யப்பட்டதோடு, சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,கலைஞர்கள் கௌர விப்பும் இடம் பெற்றது. இதன் போது 'மன்கலைச்சுரபி' , 'மன்கலைத்தென்றல்' மற்றும் 'மன் இளம் கலைச்சுரபி' ஆகிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் இவ் அரங்கில் இடம் பெற்றது. மேலும் மன்னார் மாவட்டத்தின் கலை, பண்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஊடகத்துறை மூலமாக தமது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை வழங்கி வரும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு 'செய்திச் செம்மல்' என்னும் கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

 குறித்த மலர் வெளியீடு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வு ஆகியவற்றை மன்னார் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் மற்றும் கலைஞர் எஸ்.சதீஷ் ஆகியோர் தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.




















மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற மலர் வெளியீடும்,மாவட்ட கலைஞர் கௌரவிப்பும். Reviewed by Author on November 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.