அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை உபகரணங்கள் பயிற்சி புத்தகங்கள் 300 சதவீதம் வரை விலை அதிகரிப்பு

பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட பென்சில் 40 ரூபாய் என்றும், பேனா 30 ரூபாய் என்றும், 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட பயிற்சிப் புத்தகம் 120 ரூபாய் என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் 1200 ரூபாவாக இருந்த பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் போத்தல்கள் என அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதவிர, வண்ண பென்சில்கள், பெஸ்டல்கள், பென்சில் பொக்ஸ்கள் போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை உபகரணங்கள் பயிற்சி புத்தகங்கள் 300 சதவீதம் வரை விலை அதிகரிப்பு Reviewed by Author on November 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.