செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
மூன்று மாத பயிற்சியின் பின்னர் செயன்முறைத் தேர்வில் பங்கேற்ற பிறகு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படும்.
காது கேளாதோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த ஸ்ரீயான் கொடித்துவக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதைப் பாராட்டுவதாகவும், இது தொடர்பாக உலக காது கேளாதோர் கூட்டமைப்பிற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பேசுகையில், பல தசாப்தங்களாக இருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment