மூளைச்சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் !
அவர், பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கடந்த 26 ஆம் திகதி பேருந்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எவ்வாறாயினும் அவர் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்தமையால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய வைத்தியர்கள் அனுமதி கோரியிருந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் உள்ள அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் முடிவு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிரகாரம், பதுளை பொது வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அறிவித்து, தேவையான ஏற்பாடுகளை தயார் செய்தனர்.
அதனையடுத்து, விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது இதயம் வெளிநாட்டு வைத்தியர் குழுவின் உதவியுடன் மற்றுமொரு நோயாளிக்கு பொருத்தப்பட உள்ளது. அத்துடன், அவரது நுரையீரல் மற்றும் கல்லீரல் கண்டி வைத்தியசாலையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், இரண்டு சிறுநீரகங்களும் பதுளை பொது வைத்தியசாலையில் உள்ள இரண்டு நோயாளர்களுக்கும் பொருத்தப்பட உள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
நோயாளியின் முக்கிய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதன் பின்னர் உடல் பதுளை பொது வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மூளைச்சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் !
Reviewed by Author
on
November 01, 2022
Rating:

No comments:
Post a Comment