மன்னார் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் நாளை முதல் கட்டாய நடைமுறை
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப்படுத்தப்படாவிட்டாலோ அதிகூடிய கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ மன்னார் நகரசபைக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது நாளை தொடக்கம் மன்னார் நகரசபை எல்லைக்குள் காணப்படும் பள்ளிமுனை,பெரியகமம்,மற்றும் சந்தை மாட்டிறைச்சி கடைகளில் ஒரு கிலோ தனி மாட்டிறைச்சியின் விலை 1500 ரூபாவும் முள்ளுடன் 1400 ரூபாவுக்கும் ஒரு கிலோ ஈரல் 2000 ரூபாவுக்கும் ஆட்டிறைச்சி 2600 ரூபாவுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது
குறித்த மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் இறைச்சியின் விற்பனை விலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்துமாறும் குத்தகைத்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அவ்வாறு விற்பனை விலை காட்சிப்படுத்தாமல் அதி கூடிய விலைக்கு மாட்டிறச்சி விற்பனை செய்யப்பட்டால் மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேரடியாகவோ தொலைபேசி ஊடாகவோ முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே நேரம் அனுமதியை மீறி அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபடும் குத்தகை தாரர்களின் குத்தகை ஒப்பந்த இரத்து செய்யப்படும் எனவும் மன்னார் நகரசபை அறிவித்துள்ளது
மன்னார் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் நாளை முதல் கட்டாய நடைமுறை
Reviewed by Author
on
December 31, 2022
Rating:
Reviewed by Author
on
December 31, 2022
Rating:

.jpg)

No comments:
Post a Comment