அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் மருத்துவ உதவி அதிகரிக்கப்படவுள்ளது

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக தற்போது சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகள் வழங்கப்பட்டவுடன் வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இதன்படி, 2023 ஆம் ஆண்டின் சில மாதங்களில், மருத்துவ உதவியாக வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. எந்தெந்த நோய்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்பதைத் தவிர, மேலும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் தேவையான பரிந்துரைகளை வழங்க குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன், தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, மருத்துவ உதவி தொகை மற்றும் மருத்துவ உதவி செலுத்தப்படும் நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்படும். மருத்துவ உதவி பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து மற்றும் ஏனைய பொருளாதாரச் சிரமங்களைக் கருத்திற்க் கொண்டு, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து பணம் செலுத்தப்படும் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆறு தடவை குறுஞ்செய்தி அனுப்பப்படும். 2023 இல் இந்த நடவடிக்கைகளை மேலும் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது


.
இலங்கையில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் மருத்துவ உதவி அதிகரிக்கப்படவுள்ளது Reviewed by Author on December 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.