அண்மைய செய்திகள்

recent
-

முச்சக்கர வண்டி – கார் விபத்தில் ஒருவர் பலி

கொள்ளுப்பிட்டி அல்பிரட் மாவத்தைக்கு அருகில் இரவு விடுதியில் இருந்து திரும்பிய ஐந்து பேர் கொண்ட சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

 கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதான டிரம் துவான் என்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தின் போது பம்பலப்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்ததாகவும் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் சம்பவ இடத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது

.
முச்சக்கர வண்டி – கார் விபத்தில் ஒருவர் பலி Reviewed by Author on December 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.