சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா
தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் புதன்கிழமை(7) மாலை வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் 10 குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சொரூப பவனியும் ஆசியும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது போசாலை மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித வெற்றி நாயகி அன்னையின் ஆசிரை பெற்றனர்.
சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா
Reviewed by Author
on
December 09, 2022
Rating:

No comments:
Post a Comment