மன்னாரில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
இதன் போது தீபம் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,திணைக்களத்தலைர்கள் கலந்து கொண்டனர்.
-இதே வேளை மன்னார் கலங்கரை கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் சுனாமி நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மன்னாரில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
Reviewed by Author
on
December 26, 2022
Rating:

No comments:
Post a Comment