அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு!

பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் கடந்த முதலாம் திகதி புதிய கட்டடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்கள், இரண்டு மின் விசிறிகளும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 திறப்பு விழாவின்போது, மண்டபத்துக்குரிய திறப்புகள் கதவின் கோர்வையாக கதவிலே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து திருடப்பட்ட இரண்டு சாவிகளைக் கொண்டே திறந்து திருடப்பட்டுள்ளது. சுமார் நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான மின் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு திருடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்கள் பாடசாலைகள் விடுமுறை தினமாகையால், இன்றைய தினமே கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளிநொச்சியில் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு! Reviewed by Author on December 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.