அண்மைய செய்திகள்

recent
-

தினேஷ் ஷாப்டர் படுகொலை – பொலிஸார் விளக்கம்

இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். 

 மேலும் கருத்து தெரிவித்த அவர், கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் வகையில் ஆதாரங்களை பதிவு செய்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்த விசாரணைகளின் படி சாட்சியங்களை பெற்றுக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன

.
தினேஷ் ஷாப்டர் படுகொலை – பொலிஸார் விளக்கம் Reviewed by Author on December 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.