ஹீட்டர் வெடித்து 3 மாத குழந்தை பலி!
அங்கொட, அம்பத்தல பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றரை மாத குழந்தையொன்று எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஹீட்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த மற்றுமொரு குழந்தை ஹீட்டரைப் பயன்படுத்தியதாகவும், ஹீட்டர் வெடித்த போது தாய் வீட்டில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீட்டர் வெடித்ததையடுத்து குழந்தை இருந்த கட்டிலில் தீப்பிடித்து அறைக்குள் தீ பரவியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீட்டர் வெடித்து 3 மாத குழந்தை பலி!
Reviewed by Author
on
December 17, 2022
Rating:

No comments:
Post a Comment