A/L பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைப்பு
தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
.
.
A/L பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைப்பு
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment