உலகின் மிகவும் வயதான நபரான அருட்சகோதரி லூசில் ராண்டன் 118 ஆவது வயதில் இயற்கை எய்தினார்
41 வயதில் Daughters of Charity சபையில் கன்னியாஸ்திரியாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அருட்சகோதரி ஆண்ட்ரே ஆசிரியராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் பெரும் பகுதியில் குழந்தைகளை கவனித்துக்கொண்டார். போர் முடிந்த பிறகு ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அவர் 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,
"நான் எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்று தெரியவில்லை.
இரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த கேள்விக்கு கடவுளால் மட்டுமே பதில் அளிக்க முடியும்"
என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் அருட்சகோதரியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.
அருட்சகோதரி ஆண்ட்ரேக்கு முன்னதாக, தென் பிரான்ஸின் ஆர்லஸில் 1997 ஆம் ஆண்டு, தனது 122 ஆவது வயதில் உயிரிழந்த Jeanne Calment என்பவரே இதுவரை உலகில் எந்தவொரு மனிதரும் எட்டாத, உறுதிப்படுத்தப்பட்ட வயதை அடைந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலகின் மிகவும் வயதான நபரான அருட்சகோதரி லூசில் ராண்டன் 118 ஆவது வயதில் இயற்கை எய்தினார்
Reviewed by Author
on
January 19, 2023
Rating:

No comments:
Post a Comment