இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்!
.இதில் 43 பேர் ஆண்கள், 02 பேர் பெண்கள், ஒரு 13 வயது குழந்தை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
“மனித கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரான்ஸ் முன்னுரிமை அளிக்கிறது,” என பிரான்ஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாடுகடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெகிவளையில் உள்ள கடத்தல்காரர்கள் ஏற்பாட்டில் இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும் இதற்காக ஒவ்வொரு இலங்கையரிடமும் 2 லட்சம் இலங்கை ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்!
Reviewed by Author
on
January 19, 2023
Rating:

No comments:
Post a Comment