கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் கொலையில் அவிழும் மர்மமுடிச்சுக்கள்!
முதற்கட்ட விசாரணை
வர்த்தகர் கொலையில் முதற்கட்ட விசாரணைகளின் படி அவர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை இழுத்து குளியல் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதோடு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பல ஆணுறைகளும் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.உயிரிழந்த தொழிலதிபர் 50 வயதுடையவர் மற்றும் அவர் திருமணமாகாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த கடனட்டைகளை பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண் ஒருவருக்கு தொடர்பு
அதேவேளை குறித்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படாததால், அருகில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கெமராக்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோடீஸ்வர வர்த்தகரின் கார் நீர்கொழும்பிலுள்ள வீடு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் கொலையில் அவிழும் மர்மமுடிச்சுக்கள்!
Reviewed by Author
on
February 03, 2023
Rating:

No comments:
Post a Comment