அண்மைய செய்திகள்

recent
-

பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. 

அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளது. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை! Reviewed by Author on February 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.