அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.வலி வடக்கில் படையினரின் வசம் இருந்த 109 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக சென்று தற்போது 22 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அகதி முகாம்களின் வசித்து வருகின்றனர் அவ்வாறு இடம் பெயார்ந்த மக்களின் வீட்டுக்காணிகள்,தோட்டக்காணிகள்,வயல் நிலங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கடற்படையினர் மற்றும் இரானுவத்தினர் கைப்பறியிருந்ததுடன் குறித்த காணிகளை விடுவிக்க கோரி வலிகாமம் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர் 

 இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, இன்று (பெப்ரவரி 03 ஆம் திகதி) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்றையதினம் அறிவித்துள்ளது குறித்த ஊடக அறிக்கையில் இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும். இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும். 

இதற்காக காணி உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் அமைந்துள்ள நகர மண்டபம், அன்றைய தினமே வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன். , மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கு, மீள்குடியமர்வுக்கு அவசியமான உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான நகரஅபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




யாழ்.வலி வடக்கில் படையினரின் வசம் இருந்த 109 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு Reviewed by Author on February 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.