அண்மைய செய்திகள்

recent
-

காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

காதல் உறவால் ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண்ணின் தாயார் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார் சம்பவத்தில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாகக் கொண்ட லக்‌ஷானி (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரத்கம பிரதேச சபையில் சிற்றுழியராக பணியாற்றும் 55 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும், அவர் உயிரிழந்த பெண்ணின் தாத்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறித்த காதல் தொடர்பு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! Reviewed by Author on February 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.