நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாளைய தின(01) ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் எரிபொருள், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.
நாளைய தினம்(01) தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
Reviewed by Author
on
February 28, 2023
Rating:

No comments:
Post a Comment