மன்னார் பிரதேச செயலகத்தில் ADRA நிறுவனத்தின் அனுசனையில் நடைபெற்ற உற்பத்தித்திறன் பயிற்சி
மன்னார் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை வினைத்திறனாக்கும் நோக்குடன் 5 நாட்களைக் கொண்ட உற்பத்தித்திறன் பயிற்சியானது" ADRA" நிறுவனத்தின் அனுசரணையுடன் 2023 பங்குனி மாதம் 15,16,17,21,22ம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இனிதே இடம்பெற்றது .
இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக மன்னார் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு R.றொபின் ஜெயரூபன், யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.S.பிரசாத், திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு A.நுஸ்ரி, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி P.தர்சனா ஆகியோர் கலந்து கொண்டு இப் பயிற்சிநெறியினை சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.
பயிற்சி நெறியின் முடிவில் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

No comments:
Post a Comment