அண்மைய செய்திகள்

recent
-

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தில் பாதிக்கு சமமான CFI மதிப்புடைய மின்சார வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். 


 மேலும், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்த வேண்டிய வரியை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பணம் 475 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்! Reviewed by Author on March 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.