அண்மைய செய்திகள்

recent
-

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky அறிமுகம்

Twitter செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். Twitter நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான Elon Musk கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன்போது, Twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவர் விரைவில் Twitter நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின. 

 இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Twitter போன்ற புதிய சமூக வலைதளத்தை Jack Dorsey அறிமுகப்படுத்தியுள்ளார். Twitter-ஐ ஒத்த வகையில் பயன்படுத்தப்படும் இந்த சமூக வலைத்தளத்திற்கு Bluesky என பெயரிடப்பட்டுள்ளது. Apple இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் Android இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு மே மாதத்திற்கு இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள Jack Dorsey, பயனர்களின் வசதிக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



Twitter செயலிக்கு மாற்றாக Bluesky அறிமுகம் Reviewed by Author on March 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.