அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச மகளிர் தினம் இன்று

பெண்மையைப் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று(08) கொண்டாடப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு தான் இந்நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. வேலை நேரத்தை குறைக்கவும் கொடுப்பனவை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 தொழில் புரியும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பேரணியொன்றை நடத்தினர். இந்த நாளை, அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி அறிவித்தது.

 சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. எனினும் பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், தொழிற்சங்க போராட்டங்களிலேயே இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன. “பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்பது இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது. அனைவரும் இணைந்தால், பாலின பாகுபாடற்ற உலகை உருவாக்க முடியும் என்பது திண்ணம்


.
சர்வதேச மகளிர் தினம் இன்று Reviewed by Author on March 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.