மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி சி.தே. தேவராஜா, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.சி.வொலன்ரைன் , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி நிஷாந்தினி நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கல் விழா, மூத்த பெண்கள் கௌரவம் வழங்கும் நிகழ்வு,மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு மன்னார் இந்து மத பீடத்தால் 'சிங்க பெண்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்
Reviewed by Author
on
March 14, 2023
Rating:

No comments:
Post a Comment