நானாட்டான் -பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் ஆலயம் ஆயர் தலைமையில் அபிஷேகம் செய்து ,திறந்து வைப்பு.
மன்னார் - நானாட்டான் பங்கின் பள்ளங்கோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் நேற்று(20) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்
விசேட திருப்பலி ஆராதனையுடன் பள்ளங் கோட்டை புனித அந்தோணியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட குருமுதல்வர், பங்கு தந்தையர்கள் ,அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள், ஆலய சபை நிர்வாகத்தினரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
மேலும் இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட குருமுதல்வர், பங்கு தந்தையர்கள் ,அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள், ஆலய சபை நிர்வாகத்தினரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
அதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரின் 75 வது பிறந்த தினத்தை ஒட்டி கேக் வெட்டி ஆயரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பள்ளங்கோட்டை புனித அந்தோணியார் ஆலயமானது கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) அபிஷேகம் செய்யப்பட்டு திறப்பு விழா இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் -பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் ஆலயம் ஆயர் தலைமையில் அபிஷேகம் செய்து ,திறந்து வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 21, 2023
Rating:

No comments:
Post a Comment