அண்மைய செய்திகள்

recent
-

உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினால் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை-MP சாள்ஸ் விஜயம்.

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக   பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,குறித்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இன்று திங்கள் (22) மதியம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.அதன் அடிப்படையில் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரை யை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.தொடர்ச்சியாக மக்கள் மத்தில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான   செயற்பாடுகள் தொடர்ச்சியாக காரணங்களாக உள்ளது.மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளது.

 மடு,முருங்கன்,திருக்கேதீஸ்வரம்,சௌத்பார்,தலைமன்னார் போன்ற இடங்களில் உள்ளது.ஆனால் இங்கே பௌத்த குடும்பங்கள் 50 கூட இல்லை.

பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த விடையத்தை உடனடியாக நான் புத்த சாசன அமைச்சர் உடைய கவனத்திற்கும்,மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்துகின்றேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது.குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையிலே நேரடியாக குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.












உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினால் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை-MP சாள்ஸ் விஜயம். Reviewed by NEWMANNAR on May 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.