அண்மைய செய்திகள்

recent
-

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை!

 உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாகவும் குறிப்பிடடுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசாங்க வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை! Reviewed by Author on June 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.