சிறுமியை மிரட்டிய இராணுவ வீரர் கைது
17 வயதான பாடசாலை மாணவியொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டிய இராணுவ வீரரை கட்டுகஸ்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பாடசாலை மாணவியின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதான இராணுவ வீரரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமியை மிரட்டிய இராணுவ வீரர் கைது
Reviewed by Author
on
June 15, 2023
Rating:

No comments:
Post a Comment