கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது
கல்கிசையில் பகுதில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பெண்கள் உட்பட 8 பேரை நேற்று மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரிலேயே இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 19 தொடக்கம் 29 வயதுடையவர்கள் எனவும், களுத்துறை, இடல்கசின்ன, பன்னிபிட்டிய, வாதுவ, வத்தளை மற்றும் ஹல்மில்லாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது
Reviewed by Author
on
June 16, 2023
Rating:

No comments:
Post a Comment