சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சு
சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்நாட்டு படைகளுக்கு வழங்கக்கூடிய பயிற்சி வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத போதைப்பொருள் நாட்டிற்குள் செல்வதைத் தடுப்பதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருக்கு கமல் குணரத்ன அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment