மண்சரிவு எச்சரிக்கை... மக்கள் அவதானமாக இருக்கவும்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (6) பிற்பகல் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாறை சரிவுகள், நிலச்சரிவுகள், நிலம் சரிவு, மேடு சரிவுகள் போன்ற நிலைமைகள் குறித்து அந்த பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை... மக்கள் அவதானமாக இருக்கவும்!
Reviewed by Author
on
June 06, 2023
Rating:

No comments:
Post a Comment