இரண்டாவது ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள சூரியவெவ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதே மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலையில் உள்ளது
இரண்டாவது ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி
Reviewed by Author
on
June 04, 2023
Rating:

No comments:
Post a Comment