அண்மைய செய்திகள்

recent
-

ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

 மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மை கைது செய்யவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி சமர்ப்பித்த மனு மீதான விசாரணையை ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுவில் தலையிடுமாறு வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இடைக்கால மனுவொன்றை சமர்ப்பித்த போது, அதற்கான காரணங்களை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு Reviewed by Author on June 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.