வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்
வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்காக மேலதிகமாக 200 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இந்த ஆண்டுக்குள் உலக வங்கியிடமிருந்து, 700 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இரண்டு பெரிய கடன் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் நிதியானது, குறைந்த வருமானம் பெறும் 3 மில்லியன் குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளதாக திறைசேரி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்
Reviewed by Author
on
June 04, 2023
Rating:

No comments:
Post a Comment