இராணுவ புலனாய்வாளர்களின் அப்பட்டமான தாக்குதல் - கஜேந்திரகுமாருக்காக குரல் கொடுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது இலங்கை உளவுத்துறையின் அப்பட்டமான தாக்குதலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
குறித்த கண்டன செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசு மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அரசும் கூட என்பதன் வெளிப்பாடே இந்த தாக்குதல் ஆகும்.
இலங்கை அரசாங்கம் சைவக் கோவில்களை அழிப்பதைத் தடுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முயற்சிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஆதரவாக நிற்கிறது.
ஆலயங்களை அழிப்பதன் நோக்கம் தமிழர் தாயகத்தையும், தமிழரின் அடையாளத்தையும் அழிப்பதே ஆகும்.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள ஆயுதப்படைகள் ஏற்கனவே வெளியேறி இருக்க வேண்டும். சிங்கள ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை குறிவைப்பதன் தொடர்ச்சியே தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணித் தலைவருக்கு எதிரான இந்த தாக்குதல், இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் செயற்பாட்டிற்கு இடமில்லை என்பதையே காட்டுகிறது. என்றுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment