பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்
வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உயர்நிலைப் பாடசாலையில் இடமபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பட்டதாகவும் அதில் 18 வயதுடைய பட்டதாரி மாணவன் ஒருவனும் 36 வயதுடைய அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிக்வின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாகவும், மற்ற நான்கு பேருக்கு சாதாரண காயங்கள்
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்
 
        Reviewed by Author
        on 
        
June 07, 2023
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
June 07, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment