மன்னார் கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வள்ளம் நீரில் மூழ்கியது-ஒருவர் பலி-ஒருவரை காணவில்லை.
2ம் இணைப்பு
மன்னார் கட்டுக்கரை குளத்தில் மூழ்கிய மற்றைய மீனவரின் உடலமும் மீட்பு
1ம் இணைப்பு
மன்னார் கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வள்ளம் நீரில் மூழ்கியது-ஒருவர் பலி-ஒருவரை காணவில்லை.
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒரு மீனவர் சடலம் இன்று திங்கட்கிழமை(3) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.-சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது.
காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.
-குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை வள்ளம் ஒன்றில் (படகு) மீன் பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த வள்ளத்தில் நீர் நிரம்பி தாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலே இன்று (3) திங்கட்கிழமை காலை சக மீனவர்கள் தேடிய போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மற்றைய மீனவரை ஏனைய மீனவர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.
-மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றைய மீனவரை ஏனைய மீனவர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.
-மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வள்ளம் நீரில் மூழ்கியது-ஒருவர் பலி-ஒருவரை காணவில்லை.
Reviewed by NEWMANNAR
on
July 03, 2023
Rating:

No comments:
Post a Comment