அண்மைய செய்திகள்

recent
-

சாணக்கியனை தாக்க முற்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

மட்டக்களப்பில் இரா. சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (18) கைது செய்துள்ளதாகவும் இச் சம்பத்தில் தொடர்புடைய 10 க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு. தனியார் பேருந்து தரிப்பு நிலையத்தில் சம்பவ தினமான நேற்று (17) அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பேருந்துக்களை தடுக்குமாறு எதிர்ப்பு தெரிவித்து தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர், சாரதிகள் ஆர்ப்பாட்டதில் இரா. சாணக்கியன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் சாணக்கியன் ஊடகங்களுக்கு இந்த போக்குவரத்து அனுமதியில் ஊழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்று இருப்பதாக தெரிவித்த குற்ற சாட்டிற்கு இருவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து அந்த இருவரையும் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேற்றியதுடன் துரத்தி துரத்தி அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.


இதில் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் செய்த முறைப்பாட்டிற்கமைய அவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை இன்று (18) கைது செய்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்ட ஏனையவர்கள் தலை மறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




சாணக்கியனை தாக்க முற்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது Reviewed by Author on July 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.