தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையம் எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Reviewed by Author
on
July 15, 2023
Rating:


No comments:
Post a Comment